'தணல்' படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள தணல் படம் வருகிற 12ந் தேதி வெளியாக உள்ளது.
'தணல்' படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
Published on

சென்னை,

''பாணா காத்தாடி'', ''பரதேசி'', ''சண்டிவீரன்'' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் அதர்வா . இவர் தற்போது 'இதயம் முரளி' படத்தை தன் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில், அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் 'தணல்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதில் அஸ்வின், லாவண்யா திரிபாதி , பிரதீப் விஜயன், சர்வா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லரில் தயாராகி உள்ள இத்திரைப்படம் வரும் 12-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தணல் படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான ராது இன்போடெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com