தனுஷின் 55வது படத்திலிருந்து விலகிய பிரபல நிறுவனம்

தனுஷ் நடிக்கவுள்ள அவரது 55-வது படத்தின் தயாரிப்பிலிருந்து பிரபல நிறுவனம் விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷின் 55வது படத்திலிருந்து விலகிய பிரபல நிறுவனம்
Published on

தனுஷின் 55ஆவது படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்தப் படத்தைக் கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான, பூஜை புகைப்படங்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 'அமரன்' படத்திற்க்குப் பிறகு, ராஜ்குமார் பெரியசாமி தனுஷை வைத்து உண்மை சம்பவத்தை தழுவி படத்தை இயக்க உள்ளார்.

இப்படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே இட்லி கடை, தேரே இஷ்க் மே, தனுஷ் - 54 ஆகிய படங்களில் தனுஷ் நடித்து முடித்தார். இதில் இரண்டு திரைப்படங்கள் திரைக்கும் வந்துவிட்டன.

இந்த நிலையில், தனுஷ் 55 திரைப்படத்திலிருந்து அன்புச் செழியன் விலகியதாகக் கூறப்படுகிறது. சாய் பல்லவி இப்படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் மலையாள நடிகர் மம்முட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் பட்ஜெட் ரூ 160 கோடியை தொட்டுள்ளது. இதனால் கோபுரம் பிலிம்ஸ் படத்தை தயாரிப்பதில் இருந்து பின்வாங்கியுள்ளது. இதனால் தனுஷே தனது தயாரிப்பு நிறுவனமான வண்டர்பார் ஸ்டுடியோஸ் மூலமாக படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

அமரன் படத்தை தயாரித்த கமல் இந்த படத்தையும் தானே தயாரிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com