நடிகை சமந்தாவுக்கு ஷாக் கொடுத்த ரசிகர்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சமந்தா பங்கேற்றார்.
சிட்னி,
கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த 'விண்ணைதாண்டி வருவாயா' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. 'பானா காத்தாடி' படத்தின் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்த சமந்தா, பின்னர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்தன.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தற்போது பாலிவுட் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சமந்தா பங்கேற்றார்.
அப்போது அங்கு குவிந்திருந்த இந்திய வம்சாவளியினர், உற்சாக மிகுதியில் சமந்தாவுடன் கை குலுக்க விரும்பினர். அதில் ஒருவர் கையை பிடித்து இழுத்ததால் சமந்தா அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் பேசிய சமந்தா, ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பியதாகவும், ஆனால் அது நடக்காமல் போனதாகவும் தெரிவித்தார்.






