ஆஸ்கர் விருதுகள்: சிறந்த வெளிநாட்டு மொழிப்படமாக - ஏ ஃபெண்டாஸ்டிக் உமன் தேர்வு

90-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த வெளிநாட்டுப்படமாக- ஏ ஃபெண்டாஸ்டிக் உமன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. #Oscars
ஆஸ்கர் விருதுகள்: சிறந்த வெளிநாட்டு மொழிப்படமாக - ஏ ஃபெண்டாஸ்டிக் உமன் தேர்வு
Published on

லாஸ் ஏஞ்சல்ஸ்,

சினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் துவங்கியது. 90-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் 2-வது முறையாக தொகுத்து வழங்கினார். ஹாலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதில், சிறந்த வெளிநாட்டு மொழிப்படத்திற்கான விருது ஏ ஃபெண்டாஸ்டிக் உமன் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிலி நாட்டுப்படமான ஏ ஃபெண்டாஸ்டிக் உமன் ஸ்பானிஷ் மொழியில் வெளியானது. படத்தின் இயக்குநர் செபாஸ்டியன் லிலீயோ ஆஸ்கர் விருதைப்பெற்றுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com