ரூ.2,650 கோடி பட்ஜெட்டில் எடுத்த படம்...மோசமான படப்பிரிவில் பரிந்துரை

ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 15-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.
சென்னை,
நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்த மிக அதிக செலவுடைய திரைப்படமான தி எலக்ட்ரிக் ஸ்டேட், இந்த ஆண்டின் ராஸி(RAZZIE) விருதுகளில் மிக மோசமான படப் பிரிவில் பரிந்துரைக்க்கப்பட்டுள்ளது.
சுமார் ரூ. 2,650 கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்ட நிலையிலும், விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான கருத்துகளை பெற்றதால் மோசமான பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இதில் ’ஸ்னோ ஒயிட்’ மற்றும் ’வார் ஆப் தி வேர்ல்ட்ஸ்’ ஆகியவை அதிகபட்சமாக ஆறு பரிந்துரைகளுடன் முன்னணியில் உள்ளன, அதைத் தொடர்ந்து ’ஹரி அப் டுமாரோ’ மற்றும் ’தி எலக்ட்ரிக் ஸ்டேட்’ மூன்று பரிந்துரைகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன. ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 15-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
Related Tags :
Next Story






