"சூர்யாவுடன் ஒரு படம்.."- செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராதிகா சரத்குமார்

ராதிகா சரத்குமார் நடித்துள்ள “தாய் கிழவி” வரவேற்பைப் பெற்று வருகிறது.
"சூர்யாவுடன் ஒரு படம்.."- செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராதிகா சரத்குமார்
Published on

தூத்துக்குடி,

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ள திரைப்படம் “தாய் கிழவி”. கடந்த 27ஆம் தேதி வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் அருள்தாஸ், இளவரசு, பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள ஒரு பிரபலமான திரையரங்கில் ‘தாய் கிழவி’ படக்குழுவினர் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தனர். இதில் நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் இயக்குனர் சிவக்குமார் முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதிகா சரத்குமார், “இந்த படம் இங்கு மட்டுமல்ல, வெளிநாட்டிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. வெகு நாள்களுக்கு பிறகு ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறேன். ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குனர் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யாவுடன் ஒரு படம் நடிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com