அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு “ராமாயணா” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

இந்த படத்தில் ராமராக நடிகர் ரன்பீர் கபூரும், சீதையாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு “ராமாயணா” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Published on

சென்னை,

வால்மீகி எழுதிய ராமாயணம் கதையை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் ஏராளமான திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மேடை நாடகம் முதல் 3டி தொழில்நுட்பம் வரை ராமாயண கதை தலைமுறைகளை கடந்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அந்த வகையில், மிகப்பெரிய பொருட்செலவில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ‘ராமாயணா’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ராமராக நடிகர் ரன்பீர் கபூரும், சீதையாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணன் கதாபாத்திரத்தை கன்னட நடிகர் யாஷ் ஏற்றுள்ளார். இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கும் இந்த படம் 2 பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணம், இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற 2 இசையமைப்பாளர்கள் பணியாற்றுவதுதான். சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானும், லயன் கிங், கிளாடியேட்டர் இன்டர்ஸ்டெல்லார் உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற படங்களுக்கு இசையமைத்த ஹான்ஸ் ஜிம்மரும் இந்த படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். இவர்கள் இருவருமே தலா 2 ஆஸ்கார் விருதுகளை வென்றவர்கள் ஆவர். இந்தியாவின் புகழ்பெற்ற இதிகாச திரைப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானுடன், ஹான்ஸ் ஜிம்மர் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘ராமாயணா’ படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை கடந்த ஜனவரியில் படக்குழு வெளியிட்டது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரது காட்சிகளும், பின்னர் ராமர் மற்றும் ராவணன் சண்டையிடும் ஒரு காட்சியும் இடம்பெற்றுள்ளது. மேலும் அனுமனாக நடித்துள்ள சன்னி தியோல் தோன்றும் காட்சியும் இடம்பெற்றது. மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனுமன் ஜெயந்தியை (இன்று) முன்னிட்டு ‘ராமாயணா’ திரைப்படத்தில் ‘ராமர்’ கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின் விஎஃப்எக்ஸ் தரம் இந்தியத் திரைப்படத் தரத்தை ஒரு படி மேலே கொண்டு செல்வதுபோல் உள்ளது.இந்த படம் திரையரங்குகளில் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com