அடையாளத்தை மாற்றுவதற்கான ஒரு பயணம் - கவனம் ஈர்க்கும் 'லேபில்' டிரைலர்

ஜெய் நடித்துள்ள 'லேபில்' வெப் தொடரின் டிரைலர் வெளியாகி உள்ளது.
அடையாளத்தை மாற்றுவதற்கான ஒரு பயணம் - கவனம் ஈர்க்கும் 'லேபில்' டிரைலர்
Published on

சென்னை,

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'. இந்த தொடரில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'லேபில்' வெப் தொடரின் பர்ஸ்ட்லுக் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தற்போது இந்த தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'லேபில்' வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com