ஜூலை 17-ம் தேதி திரைக்கு வரும் படங்கள்... ஒரு பார்வை

ஜூலை 17-ம் தேதி பல்வேறு கதைக்களங்களை கொண்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
ஜூலை 17-ம் தேதி திரைக்கு வரும் படங்கள்... ஒரு பார்வை
Published on

சென்னை

தமிழ் மற்றும் ஹாலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பல திரைப்படங்கள் வருகிற 17-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. அவற்றில் முக்கியமான படங்கள் குறித்து பார்க்கலாம்.

’தி ஒடிசி’

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘தி ஒடிசி’ திரைப்படம் 17-ம் தேதி வெளியாகிறது. கிரேக்கக் கவிஞர் ஹோமரின் புகழ்பெற்ற ‘ஒடிசி’ காவியத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், உலகளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

’அன்பே டயானா’

இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படமும் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ரம்யா ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

’அருள்வான்’

கணேஷ் விநாயக் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள ‘அருள்வான்’ திரைப்படமும் 17-ம் தேதி வெளியாக உள்ளது. 2013-ஆம் ஆண்டு வெளியான ‘தகராறு’ படத்திற்குப் பிறகு, அருள்நிதி மற்றும் கணேஷ் விநாயக் கூட்டணி மீண்டும் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளது.

’ஓ சுகுமாரி’

பரத் தர்ஷன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் திருவீர் நடித்துள்ள ‘ஓ சுகுமாரி’ திரைப்படமும் 17-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களுக்கு விருந்து

ஜூலை 17-ம் தேதி பல்வேறு கதைக்களங்களை கொண்ட இந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளதால், திரையரங்குகளில் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com