என்னை நிறைய பேர் ஆபாசமாக.... நடிகை இஷா கோபிகர் வேதனை

சினிமாவில் ஆரம்பத்தில் இருந்தே பாலியல் தொல்லையை சந்தித்தேன் என்று நடிகை இஷா கோபிகர் கூறினார்.
என்னை நிறைய பேர் ஆபாசமாக.... நடிகை இஷா கோபிகர் வேதனை
Published on

தமிழில் காதல் கவிதை, என் சுவாச காற்றே, நெஞ்சினிலே, நரசிம்மா, அயலான் படங்களில் நடித்துள்ள இஷா கோபிகர் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சினிமாவில் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டதாக தெரிவித்து உள்ளார். இது குறித்து இஷா கோபிகர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- "நான் 18 வயதில் சினிமாவில் அடியெடுத்து வைத்தேன். அப்போது இருந்தே பாலியல் தொல்லையை சந்தித்தேன். ஒரு நடிகர், டிரைவர் இல்லாமல் தனியாக வந்து தன்னை சந்திக்கும்படி அழைத்தார். ஆனால் நான் போகவில்லை. அந்த நடிகர் வேறு யாருமல்ல. இந்தி பட உலகில் அந்த சமயத்தில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர்.

என்னை நிறைய பேர் ஆபாசமாக தொட்டு இருக்கிறார்கள். நடிக்க வாய்ப்பு வேண்டுமானால் ஹீரோக்களோடு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று பலர் ஆலோசனைகளும் வழங்கினர். நான் 1998-ல் ஏக் தா தில் ஏக் தி டாட்கன் படம் மூலம் அறிமுகமானேன். தமிழில் காதல் கவிதை படம் எனக்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது'' என்றார். நடிகை இஷா கோபிகரின் பாலியல் குற்றச்சாட்டு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com