``ஒரு பேரே வரலாறு !'' - விஜய்க்கு நடிகர் சிபி சத்யராஜ் வாழ்த்து

இறுதிப் போரில் வெற்றி வாகை சூடிய நமது முதலமைச்சர் தளபதி விஜய் அண்ணா அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துகள் என சிபி சத்யராஜ் பதிவிட்டுள்ளார்.
``ஒரு பேரே வரலாறு !''  - விஜய்க்கு நடிகர் சிபி சத்யராஜ் வாழ்த்து
Published on

சென்னை,

தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டு வருகிறது. எனினும், பெரும்பான்மையை (118 எம்.எல்.ஏ.க்கள்) நிரூபிக்க வேண்டிய சூழல் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகள் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.

தற்போது எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ள நிலையில், வி.சி.க. இன்று முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஆதரவு கிடைக்கும்போது, த.வெ.க.வின் மொத்த பலம் 119 ஆக இருக்கும். இவை அனைத்தும் விஜய்க்கு சாதமாக முடிந்தால், விரைவில் அவர் முதலைமைச்சராக பதிவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் சிபி சத்யராஜ் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, "இறுதிப் போரில் வெற்றி வாகை சூடிய நமது மதிப்பிற்குரிய முதலமைச்சர் தளபதி விஜய் அண்ணா அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துகள்.

இக்கட்டான காலங்களில் ஒரு மனிதர் எவ்வாறு மன உறுதியுடன் திகழ வேண்டும் என்பதற்கும், எத்தகைய தடைகள் குறுக்கிட்டாலும் தனது கொள்கைகளில் எவ்வாறு உறுதியாக நிலைத்திருக்க வேண்டும் என்பதற்கும், அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி ஒரு சிறந்த பாடமாகத் திகழ்கிறது.

இது வெறும் அரசியல் வெற்றி மட்டுமல்ல; தமிழ்நாட்டிற்கு ஒரு புதிய பாதையையும், புதிய நம்பிக்கையையும் அளித்திட மக்கள் வழங்கியிருக்கும் ஓர் ஆணை ஆகும்.

ஒரு பேரே வரலாறு!"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com