அஜித்தின் ரேசிங் அணிக்கு புதிய களம்.. மிச்செலின் லு மான்ஸ் கோப்பையில் பங்கேற்பு

அஜித்​கு​மார், தனது பெயரில் சொந்​த​மாக ரேஸிங் அணி ஒன்றை உரு​வாக்கி சர்வ​தேச தொடர்​களில் பங்​கேற்று வரு​கிறார்.

அஜித்தின் ரேசிங் அணிக்கு புதிய களம்.. மிச்செலின் லு மான்ஸ் கோப்பையில் பங்கேற்பு
Published on

அஜித் குமார் ரேசிங் அணி, இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் (Silverstone) பந்தயக் களத்தில் நடைபெற உள்ள 2026 மிச்செலின் லு மான்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.

சர்வ​தேச தொடர்​களில் அஜித்

நடிகர் அஜித்​கு​மார் ‘குட் பேட் அக்​லி’ படத்தை அடுத்​து, ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கும் ‘டேர்​டெ​வில்’ படத்​தில் நடிக்​கிறார். அவருடைய சர்​வ​தேச கார் ரேஸ் பயணத்​தை​யும், அதில் அவர் எதிர்​கொண்ட சவால்​களை​யும் மையப்​படுத்தி உரு​வாகி​யுள்ள ‘கிளாடியேட்​டர்​ஸ்’ என்ற ஒரு மணி நேர ஆவணத் திரைப்​படம் அக்​டோபர் மாதம் வெளி​யாக இருக்​கிறது. இதற்​கிடையே கார் ரேஸிங்​கில் அதிக ஈடு​பாடு கொண்ட அஜித்​கு​மார், தனது பெயரில் சொந்​த​மாக ரேஸிங் அணி ஒன்றை உரு​வாக்கி சர்வ​தேச தொடர்​களில் பங்​கேற்று வரு​கிறார்.

மிச்செலின் லு மான்ஸ் தொடர்

கடந்த வாரம் ஐரோப்​பா​வில் நடை​பெற்று வரும் மிச்​சலின் லீ மேன்ஸ் கோப்​பைக்​கான போட்​டி​யில் பங்​கேற்​று இருந்தார். இந்த நிலையில், அஜித் குமார் ரேசிங் அணி, இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் (Silverstone) பந்தயக் களத்தில் நடைபெற உள்ள 2026 மிச்செலின் லு மான்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. அஜித்குமாரின் ரேசிங் அணி இந்த பந்தயத்தில் முத்திரை பதிக்குமா? என்ற எதிர்பார்ப்பு அஜித்குமார் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

விபத்தை சந்தித்த அஜித்தின் கார்

முன்னதாக கடந்த வாரம் ஐரோப்பாவில் நடைபெற்ற போட்டியில், அஜித்​தின் கார் திடீரென கட்​டுப்​பாட்டை இழந்து விபத்துக்​குள்​ளானது. இதில் காரின் முன்​பகுதி சேதமடைந்​தது. அஜித் காயமின்றி தப்​பி​னார். அஜித் கார் பந்​த​யங்​களில் விபத்​தைச் சந்​திப்​பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்​பும் பல்​வேறு நாடு​களில் நடை​பெற்ற போட்​டிகளில் விபத்​துகளை சந்​தித்​துள்​ளார்​ என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com