

எனக்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு புதிய தொடக்கம் என்று நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷின் ‘கொடி’ படம் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்லையில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “சில நேரங்களில், நீங்கள் இறுதியாக உங்கள் அமைதியைக் கண்டறிய தேவையற்ற முட்டுக் கட்டைகளை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இன்று, அந்த அமைதி என்னைத் தேடி வந்துள்ளது. இன்றிலிருந்து நான் என் குரலைத் தேர்ந்தெடுக்கிறேன், என் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறேன். இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை, பயமும் இல்லை.
எனக்கான பாதையை நோக்கி நான் பயணிக்கிறேன். நான் கிட்டத்தட்ட மறந்துபோன என் வாழ்க்கையை மீண்டும் காதலிக்கத் தொடங்கியுள்ளேன். நீண்ட நாட்களாகத் தம்மால் சொல்ல முடியாமல் தவித்த சில விஷயங்களை இப்போது வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ள அவர், தமக்கு ஆதரவாக நின்ற ரசிகர்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி. இது எனது குணமாகுதலுக்கான, சுதந்திரத்திற்கான மற்றும் எனக்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு புதிய தொடக்கம்” என்று நடிகை அனுபமா பரமேஸ்வரன் எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.