

சென்னை,
பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் சார்பில் கருப்பையா முருகன் தயாரித்து, இயக்கிய 'வல்லமை' படம் விமர்சன ரீதியாக பேசப்பட்டது. பிரேம்ஜி இந்தப் படத்தில் வித்தியாசமான கோணத்தில் காட்டப்பட்டார். சமூகத்தில் நடக்கும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் பிரச்சினையை மையப்படுத்தி வெளியான இந்தப்படம் பாராட்டுகளையும் குவித்தது.
இந்தநிலையில் கருப்பையா முருகன் - பிரேம்ஜி கூட்டணி மீண்டும் இணைகிறது. மியூசிக்கல் ஹாரர் ஆக வித்தியாசமான கோணத்தில் இப்படம் உருவாகிறது. இந்த படத்திற்கு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்ய, பிரேம்ஜி இசையமைக்க உள்ளார்.
இந்த புதிய படத்தையும் தனது பேட்லர்ஸ் சினிமா சார்பாக எழுதி, இயக்கி, தயாரிக்கிறார் கருப்பையா முருகன். இதர நடிகர் -நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்களும், படத்தின் இதர அப்டேட்களும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன. சமூக கருத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி ஒரேகட்டமாக நடத்தி முடிக்கப்பட இருக்கிறது.