தமிழரசன் பச்சமுத்து-தனுஷ் கூட்டணியில் புதிய படம்.. கதாநாயகி யார் தெரியுமா?

இந்த படத்தில் 'உறியடி' விஜயகுமார் வில்லனாக நடிக்க உள்ளார்.
தமிழரசன் பச்சமுத்து-தனுஷ் கூட்டணியில் புதிய படம்.. கதாநாயகி யார் தெரியுமா?
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் 'கர' என்ற படத்தில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற 30-ந்தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது (டி55) படத்திலும், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் டி56 படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும், 'லப்பர் பந்து' பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க 'ஏஸ், மதராஸி, காந்தாரா' போன்ற படங்களில் நடித்த ருக்மணி வசந்த் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் 'உறியடி' விஜயகுமார் வில்லனாக நடிக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com