அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் புதிய படம்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

இப்படம் சுமார் 800 கோடி ரூபாய்க்கு அதிகமான பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட இருக்கிறது.
அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் புதிய படம்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
Published on

''புஷ்பா 2 தி ரூல்'' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ('AA22xA6') என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.இதில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அட்லீ - அல்லு அர்ஜுனின் AA22xA6 படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். அல்லு அர்ஜுனின் 22ஆவது படம் பான் வேர்ல்டு படமாக உருவாக இருக்கிறது. இப்படம் சுமார் 800 கோடி ரூபாய்க்கு அதிகமான பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது.. அல்லு அர்ஜுன் இப்படத்தில் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் அட்லீ இணைந்துள்ள படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 11 மணியளவில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com