'ஈரம்' படத்தின் கூட்டணியில் உருவாகும் புதிய திகில் படம் - முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

ஈரம் படத்தின் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு 'சப்தம்' என பெயரிடப்பட்டுள்ளது.
'ஈரம்' படத்தின் கூட்டணியில் உருவாகும் புதிய திகில் படம் - முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
Published on

சென்னை,

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழ் சினிமாவில் வெளியான ஹாரர் படங்களின் வரிசையில் முக்கிய இடத்தைப் பிடித்தது. இதில் நடிகர் ஆதி, சிந்து மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் ஈரம் படத்தின் கூட்டணியில் மீண்டும் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் மீண்டும் இணைந்து பணியாற்றுகின்றனர்.

இந்த படத்திற்கு 'சப்தம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படமும் 'ஈரம்' படத்தைப் போல திகில் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மூணார் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்று வந்த முதற்கட்ட படப்பிடிப்பை படக்குழு நிறைவு செய்துள்ளது. இதனை படத்தின் இயக்குனர் அறிவழகன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Arivazhagan (@dirarivazhagan) February 13, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com