ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் புதிய படம்

ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி புதிய படத்தில் நடிக்கிறார்.
ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் புதிய படம்
Published on

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெளியான எல்.கே.ஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஐசரி கணேஷ் அதிக பொருட் செலவில் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கார்த்திக் வேணுகோபாலன் டைரக்டு செய்கிறார். இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தை இயக்கி பிரபலமானவர். இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக உயர்ந்துள்ள ஆதி நடிப்பில் தயாராகும் 7-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் நடிக்கும் மற்ற நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com