இந்திய சினிமா வரலாற்றில் புதிய உச்சம்.. ரூ. 3,000 கோடி வசூலை கடந்தது துரந்தர்

துரந்தர் படத்தின் இரண்டு பாகங்களும் சேர்த்து ரூ. 3,000 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இந்திய சினிமா வரலாற்றில் புதிய உச்சம்.. ரூ. 3,000 கோடி வசூலை கடந்தது துரந்தர்
Published on

சென்னை,

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன், மாதவன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த திரைப்படம் துரந்தர். உலகம் முழுவதும் ரிலீசான துரந்தர், விமர்சனத்திலும், வசூலிலும் செம ஹிட்டானது. ஸ்பை த்ரில்லர் படமாக உருவான இப்படம் உலகளவில், ரூ.1,300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த படத்தின் 2-ஆம் பாகமான `துரந்தர் தி ரிவெஞ்ச் ' கடந்த 19 ஆம் தேதி வெளியானது. முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது. படம் வெளியாகி 26 நாட்களுக்குப் பிறகு, பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்து வருகிறது. இதன் வெளிநாட்டு வசூல் ரூ. 414.50 கோடியாகவும், இந்திய வசூல் சுமார் ரூ. 1,297.50 கோடியாகவும் உள்ளது. இந்த நிலையில், துரந்தர் படத்தின் இரண்டு பாகங்களும் சேர்த்து ரூ. 3,000 கோடி வசூலைக் கடந்துள்ளது.

பாகுபலி மற்றும் புஷ்பா ஆகிய இரண்டு பாகங்களின் மொத்த வசூலைவிட அதிகமாகும். பாகுபலி முதல் பாகம் ரூ. 650 கோடி வசூலித்த நிலையில், பாகுபலி 2ஆம் பாகம் ரூ. 1,788 கோடி வசூலித்தது. இதன் மொத்த தொகை ரூ 2,438 கோடி ஆகும். அதேபோல், புஷ்பா முதல் பாகம் ரூ.350.10 கோடி வசூலித்த நிலையில், புஷ்பா 2ஆம் பாகம் ரூ. 1,742.10 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com