ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள 'கள்வன்' படத்தின் புதிய பாடல் வெளியானது

'கள்வன்' படம் ஏப்ரல் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள 'கள்வன்' படத்தின் புதிய பாடல் வெளியானது
Published on

சென்னை,

பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கள்வன்'. இந்த திரைப்படத்தின் கதையை ரமேஷ் அய்யப்பன் மற்றும் பி.வி.ஷங்கர் எழுதியுள்ளனர். இந்த படத்தில் பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டில்லி பாபு தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். பி.வி ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'கள்வன்' படம் ஏப்ரல் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'அடி கட்டழகு கருவாச்சி' என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மாயா மகாலிங்கம் மற்றும் ஏகாதசி எழுதியுள்ள இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com