அஜித் ரசிகர்களுக்கு வந்த புதிய அப்டேட்.. ‘டேர் டெவில்’ படத்தின் பூஜை எப்போது?

அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித்குமார், ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்.
அஜித் ரசிகர்களுக்கு வந்த புதிய அப்டேட்.. ‘டேர் டெவில்’ படத்தின் பூஜை எப்போது?
Published on: 

சென்னை,

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நவம்பர் 2ம் தேதி எளிய பூஜையுடன் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் இணையும் அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் நடிப்பில் கடந்த ஆண்டு ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ‘டேர் டெவில்’ என பெயரிடப்பட்டுள்ளது.

ஷாலினி தயாரிப்பு - அனிருத் இசை

அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித்குமார், ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மோகன்லாலுக்கு பதிலாக உன்னி முகுந்தனா?

‘டேர் டெவில்’ படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது மோகன்லால் படத்தில் இடம்பெறவில்லை என்றும், அவருக்குப் பதிலாக ‘மார்கோ’ படப் புகழ் உன்னி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாவும் கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால், அஜித்குமார் - உன்னி முகுந்தன் இருவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படமாக இது அமையும்.

ஐதராபாத்தில் படப்பிடிப்பு

இந்த நிலையில், டேர் டெவில் படத்தின் படப்பிடிப்பு தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நவம்பர் 2ம் தேதி எளிய பூஜையுடன் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி விடுமுறைக்குப் பிறகு, நவம்பர் 13 அல்லது 16-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தில் நடிகை ஸ்ரீலீலா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com