இயக்குனர் பாண்டிராஜிடம் ரூ.2 கோடி மோசடி செய்த புகாரில் ஒருவர் கைது

இயக்குனர் பாண்டிராஜிடம் ரூ.2 கோடி மோசடி செய்த புகாரில் குமார் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இயக்குனர் பாண்டிராஜிடம் ரூ.2 கோடி மோசடி செய்த புகாரில் ஒருவர் கைது
Published on

சென்னை,

இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். இவரிடம் புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்த பிரபல ஜவுளிக்கடை வைத்திருக்கும் குமார் என்பவர் ரூ.2 கோடி வணிக ரீதியில் கடனாக பெற்றுள்ளார்.

பாண்டிராஜிடன் நிலம் வாங்கித்தருவதாக கூறியும் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கொடுத்த கடனை திருப்பி கேட்டபோது, அவர் நிலம் ஒன்றை ஈடாக கொடுத்துள்ளார்.

இதனிடையே அவர் நில பத்திரத்தில் மோசடி செய்தது பாண்டிராஜிக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, காலம் தாழ்த்தியும் தகுந்த பதிலளிக்காமலும் குமார் இருந்துவந்துள்ளார்.

இந்த நிலையில், பாண்டிராஜ் புதுக்கோட்டை மாவட்ட குற்ற பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் குமார் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com