திட்டமிட்ட செயலா.. தற்செயலா? மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய 'ஜனநாயகன்' லீக்

'ஜனநாயகன்' பட காட்சிகளை பகிரவேண்டாம் என்று இயக்குனர் எச்.வினோத் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

திட்டமிட்ட செயலா.. தற்செயலா? மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய 'ஜனநாயகன்' லீக்
Published on

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த கடைசி படமான 'ஜனநாயகன்', கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில், படம் ரிலீசாகாமல் உள்ளது. கடந்த மாதம் மறு தணிக்கை குழுவினரும் படத்தை பார்த்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த எந்த தகவலும் வெளியாகததால் ரசிகர்கள் ஏமாற்றம் கொண்டனர். தேர்தலுக்கு பிறகே படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 'ஜனநாயகன்' படத்தில் இருந்து 5 நிமிடங்கள் ஓடக்கூடிய முக்கிய சண்டை காட்சிகள் இணையத்தில் வெளியானது. இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இன்னொரு பெரிய அடி படக்குழுவினருக்கு விழுந்துள்ளது. 3 மணி நேரம் 2 நிமிடங்கள் கொண்ட 'ஜனநாயகன்' முழு படமும் நேற்று காலை இணையத்தில் வெளியானது. அதுவும் எச்.டி. தரத்தில் வெளியானது.

இது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதில் விஜய் பேசும் அரசியல் வசனங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. சட்ட மன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் படம் கசிவு திட்டமிட்டு நடந்ததா? அல்லது தற்செயலா? என கேள்விகளும் எழுந்துள்ளன. எனினும் படம் சம்பந்தப்பட்ட 'லிங்க்'கு களை முடக்கவும், பதிவிடப்பட்ட காட்சிகளை நீக்கவும் படக்குழு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில் 'ஜனநாயகன்' பட காட்சிகளை பகிரவேண்டாம் என்று இயக்குனர் எச்.வினோத் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com