விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: தளபதி- 68 படத்தின் பூஜை வீடியோ வெளியானது...!

தளபதி 68 படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: தளபதி- 68 படத்தின் பூஜை வீடியோ வெளியானது...!
Published on

சென்னை, 

'லியோ' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். 'தளபதி 68' என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படம் குறித்த அப்டேட்டுகளை ரசிகர்கள் கேட்க தொடங்கிவிட்ட நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து உள்ளது. அந்த வகையில், இன்று முதல் (அக்டோபர் 24) 'தளபதி 68' தொடர்பான அப்டேட்டுகள் வெளியாகும் என்று ஏ.ஜி.எஸ். நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து இன்று விஜயதசமி நாளில் படத்தின் பூஜை நடத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மோகன், யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com