"சூர்யா 46" படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர்

"சூர்யா 46" படத்தை ''லக்கி பாஸ்கர்'' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார்.
"சூர்யா 46" படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர்
Published on

சென்னை,

நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ''கருப்பு''. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், ''லக்கி பாஸ்கர்'' பட இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து தனது 46-வது படத்தின் படப்பிடிப்பில் சூர்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ''சூர்யா46'' என்று பெயரிடப்பட்டுள்ளது. மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு "விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்" என்ற டைட்டில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த படத்தில் பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெங்கி அட்லூரி நடிகர் துல்கர் சல்மானை வைத்து ''லக்கி பாஸ்கர்'' படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com