கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு 'மார்ஷல்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்

நடிகர் கார்த்தி இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு 'மார்ஷல்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்
Published on

சென்னை,

நடிகர் கார்த்தி 'பருத்திவீரன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது நடிப்பிற்கான பாராட்டுக்களை பெற்றார்.அதையடுத்து பையா நான் மகான் அல்ல, சகுனி, பிரியாணி, சர்கார், சுல்தான் போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார்.

இவர் இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், 'மார்ஷல்' படக்குழு நடிகர் கார்த்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, 'மார்ஷல்' படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

‘டாணாக்காரன்’ பட இயக்குனர் தமிழ் இயக்குனம் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இது கார்த்தியின் 29-வது படமாகும். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் கடல் பின்னணியில் நடக்கும் வெறித்தனமான கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com