அமெரிக்காவில் சாதனை: நடிகை ரோஜாவின் மகள் அன்ஷூவுக்கு உயரிய விருது

ஆண்டுதோறும் ஒரு மாணவருக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விருது, ரோஜாவின் மகள் அன்ஷூவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சாதனை: நடிகை ரோஜாவின் மகள் அன்ஷூவுக்கு உயரிய விருது
Published on

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா- திரைப்பட இயக்குனர் செல்வமணியின் மகள் அன்ஷூ ரோஜா ஆவார். இவர் இந்தியானா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டப்படிப்பு பயின்று வருகிறார்.

விஞ்ஞானியாக வேண்டும் என்ற இலக்குடன் படிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் அவர், படிப்புடன் சமூக சேவைகளிலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அமெரிக்காவின் இந்தியானா பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் இந்த ஆண்டுக்கான புகழ் பெற்ற ஹெர்மன் பி வெல்ஸ் விருது அன்ஷூவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஒரு மாணவருக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விருது, கல்வி திறமை மட்டுமின்றி தலைமைத்திறன் மற்றும் சமூக சேவையிலும் முன்னிலை வகிப்பவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக நடிகை ரோஜா வெளியிட்ட எக்ஸ் பதிவில், "டியர் அன்ஷூ, உன் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, தைரியம் உன்னை இந்நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இது ஆரம்பம் மட்டுமே. உன் பயணம் எங்களுக்கு அளவற்ற பெருமையை அளித்ததுடன் பலருக்கும் உத்வேகம் அளிக்கிறது," என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com