'ஒரு புயல் வருகிறது'....ராயன் படத்தின் பிஜிஎம் பணிகள் நிறைவு

ராயன் படத்தின் பிஜிஎம் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.
'ஒரு புயல் வருகிறது'....ராயன் படத்தின் பிஜிஎம் பணிகள் நிறைவு
Published on

சென்னை,

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் நடித்து இயக்கும் அவரது 50-வது படமான 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கும் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில், இப்படத்தின் 'வாட்டர் பாக்கெட்' என்ற 2வது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில், ராயன் படத்தின் பிஜிஎம் பணிகள் நிறவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார். அதனுடன், 'ஒரு புயல் வருகிறது' என்றும் பதிவிட்டுள்ளார். தனுஷின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com