திடீர் மாரடைப்பு பழம் பெரும் நடிகை இந்திரா தேவி மரணம்

பழம்பெரும் நடிகை கே.ஆர்.இந்திராதேவி சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70. இவர் ‘கொஞ்சும் குமரி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
திடீர் மாரடைப்பு பழம் பெரும் நடிகை இந்திரா தேவி மரணம்
Published on

சென்னை,

சுமைதாங்கி படத்தில் ஜெமினிகணேசன் ஜோடியாகவும், பெற்றால்தான் பிள்ளையா படத்தில் நம்பியார் ஜோடியாகவும் நடித்துள்ளார்.

கந்தன் கருணை, எங்க மாமா, ஜென்ம நட்சத்திரம், திருடாதே, பாத காணிக்கை, மன்னன், ராகவேந்திரா, பணக்காரன், மகளிர் மட்டும், சிந்து பைரவி உள்பட தமிழ், தெலுங்கு மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெலிவிஷன் தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்று இருக்கிறார்.

சென்னை தேனாம்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று காலை இந்திரா தேவிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே மரணம் அடைந்தார். இவரது கணவர் சங்கர நாராயணன். இவர்களின் ஒரே மகளான ஜெயகீதா சினிமாவில் டப்பிங் கலைஞராக பணியாற்றுகிறார்.

இந்திராதேவி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர் பொன்வண்ணன், நடிகர்கள் உதயா, ஹேமச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் இறுதி சடங்கு நடக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com