

சென்னை,
அமானுஷ்யம் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவாகும் இப்படத்திற்கு கிஷோர்குமார் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பாடல்களை எழுதி இசையமைக்கும் பொறுப்பையும் இளையராஜா ஏற்றுள்ளார்.
ஸ்காஸ்கா பிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் டாடியானா பேபன்கோ மற்றும் பிரக்சை பாபு ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை பா. சதாம் இயக்கியுள்ளார். சின்னத்திரை நடிகை ராதிகா வைரவேலவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புதுமுகங்கள் பலரும் இடம்பெற்றுள்ள இப்படத்தில் ரஷியா, சீனா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களும் நடித்துள்ளனர். அமானுஷ்யம் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவாகும் இப்படத்திற்கு கிஷோர்குமார் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பாடல்களை எழுதி இசையமைக்கும் பொறுப்பையும் இளையராஜா ஏற்றுள்ளார்.
படத்தின் தலைப்பு குறித்து இயக்குநர் சதாம் கூறுகையில், "தாயம் என்ற விளையாட்டைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். விளையாடியும் இருப்போம். ஆனால், ‘தாயன்’ என்பதை சக்திகளை உருவாக்கிய ஒருவன் என்று பொருள் கொள்ளலாம். ‘தாயன்’ உலகத்தில் ஊரோ, மொழியோ எதையும் நாங்கள் வெளிப்படுத்தவில்லை. படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு திரில்லான அனுபவத்தைத் தரும். எங்கள் படத்துக்கு இளையராஜாவின் இசை மிகப்பெரிய பலமாக இருக்கும்" என்றார்.
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் நிறைவடைந்ததும் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், விரைவில் திரைப்படம் திரைக்கு வரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.