இளையராஜா இசையில் தயாராகும் கிராமத்து படம்

இசையமைப்பாளர் இளையராஜா இசையில் `வட்டார வழக்கு' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.
இளையராஜா இசையில் தயாராகும் கிராமத்து படம்
Published on

இதில் நாயகனாக சந்தோஷ் நம்பிராஜன், நாயகியாக ரவிணா ரவி நடித்துள்ளனர். விஜய் சத்யா வில்லனாக வருகிறார். `பருத்தி வீரன்' வெங்கடேஷ், விசித்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கண்ணுச்சாமி ராமச்சந்திரன் தயாரித்து டைரக்டு செய்கிறார்.

படம் பற்றி அவர் கூறும்போது, ``1985 மற்றும் பிளாஷ்பேக்கில் 1962-ல் நடக்கும் கதையே படம். கிராமத்தில் சொத்து தகராறில் பங்காளிகளுக்குள் பகை ஏற்படுகிறது. சந்திக்கும்போதெல்லாம் மோதிக்கொண்டு திரிகிறார்கள். இதனால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து படம் தயாராகி உள்ளது. ரேக்ளா ரேஸ், கிடா முட்டு சண்டையும் படத்தில் இருக்கும். ரேக்ளா ரேஸ் இதுவரை எந்த படத்திலும் பார்க்காத அளவு பிரமாண்டமாக படமாக்கப்பட்டு உள்ளது. காதலும் இருக்கும்'' என்றார். ஒளிப் பதிவு: டோனி சான் மற்றும் சுரேஸ் சுப்பிரமணியன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com