கணவர் துணை இல்லாமல் ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியாது - லதா ரஜினிகாந்த்

என் முயற்சிகள் அனைத்தையும் எனது கணவருக்கு அர்ப்பணிக்கிறேன் என லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
கணவர் துணை இல்லாமல் ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியாது - லதா ரஜினிகாந்த்
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் இன்று சென்னையில் நடைபெற்ற, பாரத் சேவா அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டார்.

அப்போது விழாவில் அவர் தன் கணவர் ரஜினிகாந்த் குறித்து பெருமையாகக் கூறினார்.

கணவர் துணை இல்லாமல் ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியாது. என் கணவருக்கு தலைவணங்கி நன்றி கூறிக் கொள்கிறேன். என் முயற்சிகள் அனைத்தையும் எனது கணவருக்கு அர்ப்பணிக்கிறேன்.

கணவன்-மனைவி உறவில் மகிழ்ச்சியாக இருப்பது ஒவ்வொருவரின் மனப்பான்மை & சூழலை பொறுத்தது. இணைந்து வாழ்பவர்களை நினைத்து மகிழ்கிறேன்.. பிரிந்து வாழ்பவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இது இரண்டு மனங்களின் ஆத்மார்த்தமான அன்பைப் பொறுத்தது என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com