'யாரும் பார்த்திராத உலகம்' - பிரபாஸ் படம் குறித்து இயக்குனர் கருத்து


A World Never Seen Before - Hanu Raghavapudi on Prabhas film
x

ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார்.

ஐதராபாத்,

துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா, கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், சுமந்த் நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் சீதா ராமம் . இந்த வெற்றிப்பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில்தான் பிரபாஸ் தனது அடுத்து படத்தில் நடித்து வருகிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக இன்ஸ்டா பிரபலம் இமான்வி நடிக்கிறார். இது இவரது அறிமுக படமாகும். இந்நிலையில், பிரபாஸுடனான தனது படம் குறித்து இயக்குனர் ஹனு ராகவபுடி பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

'பிரபாஸ் உடன் என்னுடைய படம் மிகவும் சர்ப்ரைஸ் ஆன ஒன்றாக இருக்கும். அந்த அனுபவம் ஆடியன்ஸுக்கு ஒரு ட்ரீட் ஆக அமையும். இந்தப் படத்துக்காக இதுவரை யாரும் பார்த்திராத ஓர் உலகை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்" என்றார்.


Next Story