வில்லனாக மாறி வரும் ‘மிருகம்’ பட நடிகர்

கதாநாயகனாக நடித்த ஆதி 'தி வாரியர்' பட வில்லன் ஆனார்.
வில்லனாக மாறி வரும் ‘மிருகம்’ பட நடிகர்
Published on

ஆனந்தம் படத்தின் மூலம் அறிமுகமான டைரக்டர் லிங்குசாமி. பல வெற்றிப் படங்களை கொடுத்த இவர், அடுத்து தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் ஒரு படத்தை டைரக்டு செய்கிறார்.

தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ராம் பொத்னேனி, இதில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு தி வாரியர் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.

காவல் துறை பின்னணியில் நடக்கும் கதை, இது. ராம் பொத்னேனி போலீஸ் அதிகாரியாக நடிக் கிறார். மிருகம் பட புகழ் ஆதி பினிஷெட்டி முரட்டுத்தனமான வில்லனாக நடிக்கிறார். இவர், ஈரம் உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com