ஆதியின் “மரகத நாணயம் 2” படத்தின் படப்பிடிப்பு நிறைவு

‘மரகத நாணயம் 2’ படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
ஆதியின் “மரகத நாணயம் 2” படத்தின் படப்பிடிப்பு நிறைவு
Published on: 

சரவணன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவாகும் ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகப் படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது.

தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி, அருண்ராஜா காமராஜ், ஆனந்தராஜ் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பேண்டஸி காமெடி படமாக உருவான இந்த படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகும் என்று இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும், முதல் பாகத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஆக்ஸஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த பாகத்தையும் தயாரித்துள்ளது. ‘மரகத நாணயம்’ இரண்டாம் பாகத்திலும் ஆதி, நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர், சத்யராஜும் உள்ளிடோர் நடித்துள்ளனர் . இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகப் படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com