ஆதித்யா பாஸ்கர் - கவுரி கிஷன் நடிக்கும் “லவ் அண்ட் வார்” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் அண்ட் வார்’ திரைப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன், கே. பாக்யராஜ், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்
ஆதித்யா பாஸ்கர் - கவுரி கிஷன் நடிக்கும் “லவ் அண்ட் வார்” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

‘96’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, பிரபலமான நடிகர் ஆதித்யா பாஸ்கர் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு, ‘லவ் அண்ட் வார்’ என பெயரிடப்பட்டு, அதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‌ இதனை தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான ஜீவா மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழில் விஜய் சேதுபதியின் ‘96’ படம் மூலம் அறிமுகமானவர் கவுரி கிஷன். தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர், தனுசின் கர்ணன் மற்றும் பிகினிங் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 'ஸ்ரீதேவி ஷோபன் பாபு' என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் அண்ட் வார்’ திரைப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சரஸ் மேனன், ஜீவா ரவி, டி எஸ் ஆர் , நந்திதா ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தை ஆர்ஜின் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணா பாஸ்கர் தயாரித்திருக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் பேசுகையில், “ஒரு தேநீர் பருகும் கால அவகாசத்திற்குள் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டிய விசயத்தை 'ஈகோ'வினாலும், கோபத்தினாலும் பிரச்சனையை ஊதி பெரிதாக்கி.., உறவுகளை இழந்து விடக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும்.. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் படியும் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ‘லவ் அண்ட் வார்’ படத்தில் நடித்திருக்கும் கவுரி கிஷன் - ஆதித்யா பாஸ்கர் ஜோடி.. திரையில் அற்புதமான கெமிஸ்ட்ரி மூலம் மேஜிக் செய்து ரசிகர்களை வசப்படுத்துவார்கள்” என்றார்.

இந்நிலையில், படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜீவா மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். இதில் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன் ஆகியோரது தோற்றம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பர்ஸ்ட் லுக்கிற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com