'ஆதிபுருஷ்' முழு படமும் இணையத்தில் வெளியானது - படக்குழுவினர் அதிர்ச்சி

'ஆதிபுருஷ்' முழு படமும் இணையத்தில் வெளியானது - படக்குழுவினர் அதிர்ச்சி
Published on

ராமாயண கதையை மையமாக வைத்து தயாரான ஆதிபுருஷ் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வந்துள்ளது. இதில் பிரபாஸ் ராமராகவும் சயீப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர். கீர்த்தி சனோன் சீதையாக வருகிறார். அதிக பட்ஜெட்டில் எடுத்துள்ளனர்.

ஆதி புருஷ் படம் திரைக்கு வரும் முன்பே சர்ச்சைகளில் சிக்கியது. மீசையுடன் இருந்த பிரபாசின் ராமர் தோற்றத்தை பலர் விமர்சித்தனர். டிரெய்லரில் இருந்த காட்சிகளும் எதிர்ப்பை கிளப்பியது. சீதை இந்தியாவின் மகள் என்று இடம்பெற்றுள்ள வசனத்தை நீக்கினால்தான் நேபாளத்தில் திரையிட அனுமதிப்போம் என்று அங்குள்ள மேயர் நிபந்தனை விதித்தார். இதையடுத்து அந்த வசனத்தை நீக்கினர்.

இந்த தடைகளையெல்லாம் கடந்து திரைக்கு வந்துள்ள ஆதிபுருஷ் படத்துக்கு இன்னொரு சோதனையாக திருட்டு இணையதளம் வந்துள்ளது. படம் ரிலீசான சிறிது நேரத்திலேயே முழு படமும் திருட்டு இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் வசூல் பாதிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com