அறுவை சிகிச்சைக்குப் பின் ஷாலினி அஜித்குமார் பகிர்ந்த நெகிழ்ச்சி புகைப்படம்


அறுவை சிகிச்சைக்குப் பின் ஷாலினி அஜித்குமார் பகிர்ந்த நெகிழ்ச்சி புகைப்படம்
x
தினத்தந்தி 19 July 2024 11:18 AM GMT (Updated: 19 July 2024 11:24 AM GMT)

மகன் ஆத்விக் தனது நெற்றியில் முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலினி அஜித்குமார் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினிக்கு சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷாலினியை கவனித்துக்கொள்ள, விடாமுயற்சி படபிடிப்பிலிருந்து நடிகர் அஜித்குமார் சென்னை வந்து, அவருடன் தங்கி இருந்து விட்டு மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாலினி தற்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வில் இருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய மகன், தனக்கு நெற்றியில் முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுவரை அஜித் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஷாலினி, முதல் முறையாக மகன் தனக்கு முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தும் அழகான புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார், ரசிகர்கள் பலரும் ஷாலினியின் இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

அஜித் நடிப்பில் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த இரு படங்களும் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.


Next Story