'ஆலன்' படத்தின் 3-வது பாடல் வெளியானது

வெற்றி நடித்துள்ள ‘ஆலன்’ படத்திலிருந்து ‘ஏன் அணைந்தாய் உயிரின் தீபமே’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.
Published on

சென்னை,

இயக்குநர் சிவா .ஆர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆலன்' திரைப்படத்தில் வெற்றி, மதுரா, விவேக் பிரசன்னா, ஹரிஷ் பெராடி, 'அருவி' மதன் குமார், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். கே. உதயகுமார் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை காசி விஸ்வநாத் மேற்கொண்டிருக்கிறார். ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 3 S பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சிவா. ஆர் தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தில் 'எட்டு தோட்டாக்கள்' வெற்றி கதையின் நாயகனாகவும், நாயகிகளாக ஜெர்மன் மதுரா மற்றும் அனு சித்தாராவும் நடித்திருக்கிறார்கள். ஆலன் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை தேடல்... மற்றும் ஓர் அழுத்தமான காதல் களம் என்று படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.

தற்போது 'ஆலன்' திரைப்படத்தின் 3-வது பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் வெற்றி நடித்துள்ள 'ஆலன்' படத்திலிருந்து 'ஏன் அணைந்தாய் உயிரின் தீபமே' என்ற பாடல் வெளியாகியுள்ளது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com