"கூலி" இசை வெளியீட்டு விழாவில் அமீர்கான்

ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டுவிழா 7 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
"கூலி" இசை வெளியீட்டு விழாவில் அமீர்கான்
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூலி'. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. 'கூலி' படத்தில் இடம் பெற்றுள்ள சிக்கிடு, மோனிகா மற்றும் பவர் ஹவுஸ் பாடல்கள் வெளியாகி மக்களால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் புரோமோஷன் பணிகள் தீவரமாக நடைபெற்று வருகின்றன.

ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டுவிழா இன்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் டிரெய்லர் மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, உப்பேந்திரா, சௌபின் சாகிர், சுருதி ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தான் நடித்த தமிழ் சினிமாவின் இசை வெளியீட்டுக்கு முதல் முறையாக அமீர்கான் கலந்துகொள்ள உள்ளது எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com