மணிரத்னத்துடன் பணிபுரியும் வாய்ப்பை இழந்தது குறித்து மனம் திறந்த அமீர்கான்


Aamir Khan opens up about the missed chance to work with Mani Ratnam
x

இயக்குனர் மணிரத்னத்துடன் ஒரு படத்தில் கிட்டத்தட்ட இணைந்து பணியாற்ற இருந்ததாக அமீர்கான் தெரிவித்தார்.

சென்னை,

பாலிவுட் நடிகர் அமீர் கான், தான் நடித்துள்ள 'சீதாரே ஜமீன் பர்' படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இப்படம் வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில், இயக்குனர் மணிரத்னத்துடன் ஒரு படத்தில் கிட்டத்தட்ட இணைந்து பணியாற்ற இருந்ததாக அமீர்கான் தெரிவித்தார். அவர் கூறுகையில்,

"நாங்கள் பலமுறை சந்தித்திருக்கிறோம், பல விஷயங்களை பற்றி பேசி இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இணைந்து கிட்டத்தட்ட 'லஜ்ஜோ'என்ற படத்தை செய்ய இருந்தோம். இருப்பினும், அது நிறைவேறவில்லை," என்றார்.

லஜ்ஜோ படத்தை, இஸ்மத் சுக்தாயின் உருது சிறுகதையான கர்வாலியை தழுவி எடுக்க திட்டமிடப்பட்டதாகவும் கூறினார். இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான இந்த இருவரும் எப்போதாவது இணைந்து பணியாற்றுவார்களா? எனதை காலம் மட்டுமே நமக்குச் சொல்லும்.

1 More update

Next Story