'மகாபாரதம்' - அர்ஜுனனாக அல்லு அர்ஜுன்...அமீர்கான் திட்டம்?

அமீர்கான் தனது கனவு படமான ’மகாபாரதத்தை’ விரைவில் எடுக்க உள்ளார்.
மும்பை,
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் அமீர்கான். ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் 'சித்தாரே ஜமீன் பர்' படத்தில் நடித்து வரும் இவர், 'லாகூர் 1947' என்ற படத்தை தயாரித்தும் வருகிறார்.
இதற்கிடையில், அமீர்கான் தனது நீண்ட நாள் கனவு படமான 'மகாபாரதத்தை' எடுக்க உள்ளார். தற்போது இதன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பல பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாகத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் அர்ஜுனன் கதாபாத்திரத்தில் தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க அமீர்கான் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அட்லீயின் படத்திற்காக மும்பை சென்ற அல்லு அர்ஜுன், அமீர் கானை சந்தித்து இப்படம் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






