அமீர்கானின் "சித்தாரே ஜமீன் பர்" முதல் நாள் வசூல்

அமீர்கான் நடிப்பில் வெளியான 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் ரூ.11.7 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான் . வர்த்தக ரீதியான திரைப்படங்கள் மட்டுமல்லாமல், பல புரட்சிகர கதைகளைத் தேர்ந்து நடித்ததால், மொழியைக் கடந்த ரசிகர்கள் இவருக்கு ஏராளம். தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் "கூலி" திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் அமீர்கானின் நடித்துள்ளார்.
இந்நிலையில், அவரது தயாரிப்பில், திவி நிதி சர்மா எழுத்தில், இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் உருவான 'சித்தாரே ஜமீன் பர்' எனும் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.இதில், அவருடன் நடிகை ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மனநலம் பாதித்த மாணவர்களுக்கு, கூடைப்பந்து சொல்லி தரும் பயிற்சியாளராக ஆமிர் கான் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் மட்டும் சுமார் ரூ.11.7 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்தப் படம், கடந்த 2007 ம் ஆண்டு அமீர்கான் இயக்கத்தில், அவரது நடிப்பில் வெளியான 'சிதாரே ஜமீன் பர்' எனும் படத்தின் 2-வது பாகம் என்பது குறிப்பிடத்தக்கது
2018-ல் வெளிவந்த சாம்பியன்ஸ் என்கிற ஸ்பானிஷ் மொழி திரைப்படத்தை தழுவி தான் 'சிதாரே ஜமீன் பர்' திரைப்படத்தை எடுத்துள்ளனர். இப்படத்தை எந்த ஒரு ஓடிடி தளத்திலும் வெளியிடப்போவதில்லை என ரிலீசுக்கு முன்பே அறிவித்த அமீர்கான், இதை நேரடியாக யூடியூப்பில் வெளியிடுவேன் என்றும் கூறி இருந்தார்.
இப்படத்தை குடும்பத்துடன் இப்படத்தைப் பார்த்த சச்சின், "மனிதர்களின் குறைபாடுகளை புரிந்துகொள்ளும் அழகான படம். மக்களை ஒன்றிணைக்கும் சக்தி கொண்ட பல செய்திகள் இப்படத்தில் இருக்கின்றன. ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.






