இளம் நடிகையுடன் அமீர்கானுக்கு 3-வது திருமணம்?

இளம் நடிகையுடன் அமீர்கானுக்கு 3-வது திருமணம்?
Published on

இந்தி நடிகர் அமீர்கான் ஏற்கனவே 1986-ல் ரீனா தத்தாவை திருமணம் செய்து 2002-ல் விவாகரத்து பெற்றார். அதன்பிறகு கிரண் ராவை 2005-ல் மணந்து அவரையும் 2021-ல் விவாகரத்து செய்து பிரிந்தார். அமீர்கானுக்கு தற்போது 58 வயது ஆகிறது. சினிமாவை விட்டு அவர் விலகி இருக்கிறார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா படம் படு தோல்வி அடைந்தது. இதனால் பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இந்த விரக்தியினாலேயே சினிமாவுக்கு தற்காலிக முழுக்கு போட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் அமீர்கான் மூன்றாவது திருமணத்துக்கு தயாராவதாக இந்தி இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. அமீர்கானும் தங்கல் படத்தில் தன்னுடன் நடித்த 31 வயது இளம் நடிகை பாத்திமா சனா ஷேக்கும் நெருக்கமாக பழகுவதாக கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியானது.

தற்போது இருவரும் ஜோடியாக பந்து விளையாடிய வீடியோவும் வைரலாகிறது. இந்தி நடிகை ராக்கி சாவந்தும் அமீர்கானுக்கு 3-வது திருமணம் நடக்க இருப்பதாக தெரிவித்து உள்ளார். இதனாலேயே அமீர்கான் விரைவில் நடிகை பாத்திமா சனா ஷேக்கை 3-வது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பேசுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com