

கோலிவுட் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் வெற்றி. எட்டு தோட்டாக்கள், ஜீவி, ஜீவி 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் வெற்றி. இவர் தற்போது ஆண்மகன் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். அதில் வெற்றியின் தந்தையாக பிரபு நடிக்கிறார். கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ண பிரியா இத்திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் திரைப்படத்தில் மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர்கள் வசந்த் சாய், நந்தா பெரியசாமி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மகா கந்தன் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் மூலம் நவ்பல் ராஜா இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.
படம் பற்றி இயக்குனர் மகா கந்தன் கூறும்போது, காமெடி கலந்த சென்டிமெண்ட் படமாக உருவாகிறது. கிராமத்து தந்தை, மகனுக்கு இடையிலான உறவையும், ஊடலையும் சொல்லும் படம். தந்தையாக பிரபுவும், மகனாக வெற்றியும் நடித்துள்ளனர். சென்னை, ராமநாதபுரம், தூத்துக்குடி, மரக்காணம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது" என்றார்.
View this post on Instagram
படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.