ஆரியின் “பகவான்” படத்தின் டீசர் வெளியானது

காளிங்​கன் இயக்​கும் ‘பக​வான்’ படத்தில் ஆரி அர்​ஜுனன், பூஜிதா பொன்​னா​டா நடித்து வருகின்றனர்.
ஆரியின் “பகவான்” படத்தின் டீசர் வெளியானது
Published on

தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சாதித்த நடிகர்களில் ஆரியும் ஒருவர். இவர் 'நெடுஞ்சாலை, தரணி, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம், நெஞ்சுக்கு நீதி' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் வெற்றிபெற்று மேலும் பிரபலமானார். விஜய் மில்டன் இயக்கத்தில் 'கோலிசோடா 3' படத்திலும் நடித்துள்ளார். எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் வெளியான 'போர்த் ப்ளோர்' படம் கவனம் ஈர்த்தது. சேரன் இயக்கத்தில் டாக்டர் ராமதாசின் வாழ்க்கையை மையப்படுத்தும் 'அய்யா' படத்தில் நடித்து வருகிறார்.

புராண கால வரலாற்று பின்​னணி​யில் உரு​வாகி​யுள்ள திரைப்​படம், ‘பக​வான்’. மித்​தாலஜிகல் திரில்​ல​ராக உரு​வாகி​யுள்ள இப்படத்தை சு.​காளிங்​கன் இயக்​கி​யுள்​ளார். அம்​மன்யா மூவிஸ் நிறு​வனம் சார்​பில் சி.​வி. மஞ்​சு​நாதா தயாரித்துள்ள இதில் ஆரி அர்​ஜுனன், பூஜிதா பொன்​னா​டா, ஜேம்ஸ் பார்​ரெட், சந்​தோஷ் பிர​தாப், யோக் ஜேபி, ஆடு​களம் முருக​தாஸ் என பலர் நடித்​துள்​ளனர். முரு​கன் சரவணன் ஒளிப்பதிவு செய்​துள்ள இப்​படத்​தின் பாடல்​களுக்கு ப்ரசன் பாலாவும் பின்​னணிக்கு யுவ​ராஜும் இசை அமைத்​துள்​ளனர்.

படம் குறித்து இயக்​குநர் காளிங்​கன் “இந்​தப் பிரபஞ்சத்​தில் புரி​யாத பல விஷ​யங்​கள் இருக்​கின்​றன. எல்லோரும் பகவானை வணங்​கு​கிறோம். இந்த முழு பிரபஞ்சத்தை இயக்குபவர் பகவான் என்​றால், அவர் யார்? அவர் வெறும் உருவமா ? இல்லை வேறெது​வு​மா ? அப்​படி​யெனில் இல்லுமினாட்டி யார் ? இந்த கேள்வி​களுக்​கான பதில் தான் இப்படத்​தின் மையம். ஒரு சாதாரண கதை​யாக இல்​லாமல், பார்வையாளர்​களுக்கு புதிய அனுபவத்தை அளிக்​கும் வித​மாக இப்​படம் உரு​வாகி​யுள்​ளது.

நாம் அறிந்த மகா​பாரத கதை​யின் ஒரு பகு​தி​யும் இதில் வரும். இதில் ரசிகர்​களுக்​குப் பல ஆச்​சரி​யங்​கள் காத்​திருக்​கிறது. நாம் பொது​வாகக் கவனிக்​காமல் இருக்​கும் சா​தாரண உயி​ரின​மான பல்லி முக்​கிய கதா​பாத்​திர​மாக இடம்​பெறுகிறது. படத்​தின்​ இறுதிக் ​கட்​ட பணி​கள்​ தற்​போது நடந்​து வருகிறது” என்றார்.

இந்நிலையில், ஆரி அர்ஜுனனின் ‘பக​வான்’படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com