

விமல்-ஆஷ்னா சவேரி ஜோடியுடன், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம், வேகமாக தயாராகி வருகிறது. ஆனந்தராஜ், சிங்கம்புலி, மன்சூர் அலிகான் ஆகியோருடன் போலீஸ் அதிகாரியாக பூர்ணா நடிக்கிறார்.
இவர்களுடன் ஹாலிவுட் நடிகை மியா ராய், கன் பைட் காஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விவேகா பாடல்கள் எழுத, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். ஏ.ஆர்.முகேஷ் டைரக்டு செய்கிறார். இவர் கூறுகிறார்:-
சினிமா என்பதே 7 வகையான கதையமைப்பு கொண்டதுதான். இதற்குள் எல்லா படங்களும் அடங்கும். இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் திரைக்கதை கவர்ச்சியும், நகைச்சுவையும் கலந்து உருவாகி இருக்கிறது.
படுகவர்ச்சியான காட்சிகளில் ஆஷ்னா சவேரி, துணிச்சலுடன் நடித்து இருக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில், 20 நாட்கள் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் 30 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது.