

ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த படம் ஆவேஷம். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பஹத்தின் நடிப்பால் வெற்றிப்படமானது. பெங்களூருவைச் சேர்ந்த கேங்க்ஸ்டரான ரங்கனைச் (பகத்) சந்திக்கும் மூன்று கல்லூரி மாணவர்கள், அவரால் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.
இந்தப் படம் முதல் 5 நாள்களில் ரூ. 50 கோடியைக் கடந்து சாதனை படைத்த நிலையில், சமீபத்தில் உலகளவில் ரூ.100 கோடியை தாண்டியது. தற்போது ரூ.135 கோடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் மே 9-ம் தேதி வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram