''மேட்'' பட நடிகர் சங்கீத் ஷோபனுக்கு ஜோடியாகும் நயன் சரிகா


‘Aay’ beauty to romance ‘MAD’ hero
x

நடிகை நிஹாரிகா கொனிடேலா 'கமிட்டி குரோல்லு' என்ற படத்தை தயாரித்து தயாரிப்பாளரானார்.

சென்னை,

கடந்த ஏப்ரல் மாதத்தில், நடிகை நிஹாரிகா கொனிடேலா தனது தயாரிப்பு பேனரான பிங்க் எலிபண்ட் பிக்சர்ஸின் கீழ், ''மேட்'' பட புகழ் சங்கீத் ஷோபனுடன் ஒரு படத்தை அறிவித்தார்.

அதன் பின்பு படத்தின் எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்த படத்தில் ஷோபனுக்கு ஜோடியாக நடிக்க ''ஆய்'' மற்றும் ''கா'' பட புகழ் நயன் சரிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நடிகை நிஹாரிகா கொனிடேலா 'கமிட்டி குரோல்லு' என்ற படத்தை தயாரித்து தயாரிப்பாளரானார். அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் இப்போது இப்படத்தைத் தயாரிக்கிறார். மானசா ஷர்மா இயக்குகிறார். மானசா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.

இவர் முன்பு பிங்க் எலிபென்ட் பிக்சர்ஸின் வெப் தொடரான "ஒரு சின்ன பேமிலி ஸ்டோரி"-ல் கிரியேட்டிவ் இயக்குனராகவும், "பெஞ்ச் லைப்"-ல் இயக்குனராகவும் பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story