'முஞ்யா' நடிகரின் அடுத்த படத்தில் கதாநாயகி இவரா?


Abhay Verma-Shanaya Kapoor in talks for Shujaat Saudagars next
x
தினத்தந்தி 22 Jan 2025 11:37 AM IST (Updated: 22 Jan 2025 11:54 AM IST)
t-max-icont-min-icon

கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் "முஞ்யா".

சென்னை,

பிரபல பாலிவுட் இயக்குனர் ஆதித்யா சர்போதார் இயக்கத்தில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தி படம் "முஞ்யா". இதில், ஷர்வரி வாக், அபய் வர்மா, மோனா சிங் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

ஹாரர் காமெடி படமாக உருவான "முஞ்யா" வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது. தொடர்ந்து, இதன் 2-ம் பாகமும் உருவாக உள்ளது.

இந்நிலையில், அபய் வர்மா அடுத்ததாக ஷுஜாத் சவுதாகர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகை ஷனாயா கபூரிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story